நாளை மறுதினம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைப்பெற இருக்கிறது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளும் தங்களது மூத்த தலைவர்கள் இல்லாமல் முதன்முறையாக களம் காணுகின்றன.

இந்நிலையில் சர்ச்சை பேச்சையே தனது அடையாளமாக கொண்டிருக்கும் நடிகர் ராதாரவி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடிகர் கமலஹாசன் குறித்து பேசும் போது பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக, கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியன் ரேஸ்கோர்ஸ் போலீஸில் நேற்று புகார் அளித்தார். ரேஸ்கோர்ஸ் போலீஸார் 509 இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் ராதாரவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

[youtube-feed feed=1]