டெல்லி: 18 முதல் 45 வயதுடையவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் உதய்சங்கர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளதாவது:
தற்போது ஒரு நாளைக்கு சுமார் 11 லட்சம் மாதிரிகளை சோதித்து வருகிறோம். மேலும், 2,440 ஆய்வகங்களுடன் அதிக சோதனைகளை மேற்கொள்ளும் திறன் உள்ளது. தனியார் துறையிலிருந்து 1,200 க்கும் அதிகமானோர் உள்ளனர்.
தற்போது 18-45 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். ஏனெனில் இந்த வயதுடையோர் நாட்டில் அதிக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை என்பதால் அவர்களுக்கான தடுப்பூசி அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கொரோனா நோய் தொற்றின் நெருக்கடியை எதிர்த்து போராடுவதில் தொழில்துறை முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கும் என்று கூறி உள்ளார்.