போடி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே அமைந்துள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தும் அதிரடி வேட்டையில் லட்சக்கணக்கான பணம் சிக்கி வருகிறது.

போடி தொகுதியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவரது தொகுதி அலுவலகம் போடி சுப்புராஜ்நகர் பகுதியில்   அமைந்துள்ளது. இதை  ஒட்டி, அமைந்துள்ள தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி என்பவரது வீட்டில், 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ரொக்கமோ, ஆவணங்களோ சிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதுபோல, ஆவடியில் இன்று காலை நடைபெற்ற பல்வேறு சோதனையின்போது,  12 லட்சத்து 63 யிரத்து 110 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. அந்த பகுதிக்கு விரைலந்த தேர்தல் பறக்கும் படையினர்,  ஆவடி பகுதியில், பிரேம் என்பவரிடம் 9,500 ரூபாயும், டில்லி பாபு என்பவரிடம் 21,500 ரூபாயும், சரஸ்வதி அம்சவேணி என்பவரிடம் 82,110 ஆயிரம் ரூபாயும் என அங்குமட்டும் 1,13,110 ரூபாய் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.  அவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனது.

மேலும், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கு மேலாளரிடம் இருந்து 11 லட்சத்து 50 அயிரம் ரூபாய் பறிமுதல் செய்யபட்டுள்ளது.