திருத்தணி: சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றிபெற வேண்டி திருத்தணி முருகன் கோவிலில் முட்டிபோட்டு  திமுகவினர் படியேறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருத்தணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி பெற திமுகவினர் 20 பேர் திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்திலிருந்து முட்டி போட்டு ஏறி வெற்றி பெற வேண்டிக் கொண்டனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி தொகுதியில் திமுக சார்பில்  சந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் வெற்றிபெற வேண்டி, ஆறுபடை வீடுகளில் ஒன்றான  திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலி,ன, 365 படிக்கட்டுகடிளல் திமுக தொண்டர்கள் 20 பேர்  முட்டி போட்டு ஏறி வேண்டிக் கொண்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக திருத்தணி முருகன் கோவிலில் வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள்  முட்டி போட்டி படியேறிச்சென்று வேண்டுவது வழக்கம். அதுபோல, திமுக வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற திமுக தொண்டர்கள் முட்டிப்போட்டு படியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.