சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத்துக்கு வரும் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு, வாங்குப்பபதிவு இயந்திரம் கொண்டு செல்லுதல், தேர்தல் முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைப்பது மற்றும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடி மையங்களுக்கான பாதுகாப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.