சென்னை: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஏப்ரல் 6ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4ல் இருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
ஏப்ரல் 5ம் தேதி அன்று கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4ல் இருந்து 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். எனவே இந்த நாட்களில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள், வேட்பாளர்கள், காவல்துறையினர் வெளியில் இருந்து பணிகள் செய்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.