டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,20,669 ஆக உயர்ந்து 1,62,960 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,182 பேர் அதிகரித்து மொத்தம் 1,22,20,669 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 458 அதிகரித்து மொத்தம் 1,62,960 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 40,417 பேர் குணமாகி இதுவரை 1,14,72,494 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 5,80,345 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 39,444 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,12,980 ஆகி உள்ளது நேற்று 227 பேர் உயிர் இழந்து மொத்தம் 54,649 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 23,600 பேர் குணமடைந்து மொத்தம் 23,77,727 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,56,243 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 2,653 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,24,585 ஆகி உள்ளது. இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,622 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,039 பேர் குணமடைந்து மொத்தம் 10,94,404 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,248 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 4,225 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,97,004 ஆகி உள்ளது இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,492 பேர் குணமடைந்து மொத்தம் 9,56,170 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 28,248 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 1,184 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,01,989 ஆகி உள்ளது. நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,217 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 456 பேர் குணமடைந்து மொத்தம் 8,87,434 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 7,338 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,579 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,86,673 ஆகி உள்ளது இதில் நேற்று 19 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,719 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,527 பேர் குணமடைந்து மொத்தம் 8,58,075 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,879 பேர் சிகிச்சையில் உள்ளனர்.