இந்தியாவில் சிஏஏ எதிர்த்து போராடும் பெண் மீது துபாயைச் சேர்ந்த இந்திய சமையல்காரர் ஒருவர் அறுவருக்கத்தக்க வகையில் கீழ்த்தரமான பதிவு போட்டது சர்ச்சையானது. அதைத்தொடர்ந்து, அவர் பணி நீக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
துபாயில் உள்ள இந்திய சமையல்காரர் திரிலோக் சிங் என்பவர் தனது ஃபேஸ்புக் வலைதளத்தில், இந்தியாவில் சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சுவாதி கண்ணா என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்போவதாகவும், அவர் ஒரு விபச்சாரி, அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார், பெண்ணின் பிறப்புறுப்பு மீது ஆசிட் ஊற்றுவேன் என்றும் மிரட்டும் வகையிலும், வெளிப்படையாகவும், ஆபாசமாகவும் பதிவிட்டிருந்தார்.
மேலும், “நீங்கள் இந்தியாவில் சாப்பிடுகிறீர்கள், ஆனால் பாகிஸ்தானுக்காக போராடுகிறீர்கள்” என்று தெரிவித்திருந்தார். அவரது பதிவு இந்தியில் இருந்ததால் பலருக்கு தெரியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், இந்த பதிவு குறித்த, குறிப்பிடப்பட்ட பெண், “திரிலோக் சிங் துபாயில் வசிக்கிறார், ஒரு முஸ்லீம் நாட்டில் வசிக்கிறார். இதை என்னிடம் கூறுகிறார். நான் இந்தியாவில் வசிக்கும் ஒரு இந்தியர்’ என்று ஆங்கிலத்தில் பதிவட்டு துபாய் காவல்துறைக்கு புகார் அளித்தார்.
இதன்பிறகே திரிலோக்சிங்கின் பதிவு வெளி உலகுக்கு தெரிய வந்தது. இது நெட்டிசன்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என்று சமூகவலைதளங்களில் ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர்.
அவரது முகநூலை ஆய்வு செய்தபோது, திரிலோக் சிங் , ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்வதற்கு முன்பு டெல்லியில் உள்ள லலித் ஹோட்டலில் சமையல்காரராக பணியாற்றியது தெரிய வந்துள்ளது. ஆனால், ஓட்டல் நிர்வாகம், அவர் கடந்த 2 ஆண்டுகளாக தங்களிம் பணிபுரியவில்லை என்று லலித் ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக மறுப்பு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து உணவகச் சட்டப்படி, திரிலோக்சிங் மீது இணையதள நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது திரிலோக் சிங் பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும், அவர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.
சிங் துபாயின் தியாரா, கோல்ட் சவுக் பகுதியில் உள்ள பிரபலமான கிராண்ட் பார்பிகியூ ஓட்டலில் தலைமை சமையல் காரராக பணியாற்றி வந்தது தெரிய வந்தது. சிங்கின் கருத்து சர்ச்சையான நிலையில், அந்த ஓட்டலின் நிறுவனர் கனி, இதுபோன்ற பிரச்சினைகளை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் அவரை வேலையைவிட்டு நீக்கி விட்டதாகவும், இந்த தகவலை தங்களது கவனத்திற்கு கொண்டுவந்த வளைகுடா ஊடங்களுக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே க கடந்த மார்ச் மாதம், நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களைக் கொண்டாடும் பேஸ்புக்கில் ஒரு கருத்தை வெளியிட்டதற்காக துபாயைச் சேர்ந்த டிரான்ஸ் கார்ட் குழுமத்தின் இந்திய ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனைக் கொன்று அவரது குடும்பத்தினரை பாலியல் பலாத்காரம் செய்வதாக அச்சுறுத்திய பேஸ்புக் வீடியோவை பதிவேற்றிய பின்னர், 2018 ஜூன் மாதம், அபுதாபி நிறுவனத்தில் மோசடி மேற்பார்வையாளர் நீக்கப்பட்டார்.
2017 ஆம் ஆண்டில், இந்திய பத்திரிகையாளர் ராணா அய்யூப்பிற்கு மோசமான பேஸ்புக் செய்திகளை அனுப்பியதற்காக மற்றொரு கேரளவாசி தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.