சென்னை:

ட்டமன்ற உறுப்பினர்கள் மறைவு காரணமாக தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையாளர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

திருவொற்றியூர்  தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர்   கே.பி.பி.சாமி இருந்து வந்தார். இவர் உடல்நலம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம்  27 ஆம் தேதி காலமானார்.

அதுபோல, குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி காலமானார்.

இந்த இரு  தொகுதிகளும் காலியாக இருப்பதாக தமிழக சட்டமன்ற செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்திருந்தார். இதைதொடர்ந்து, திருவெற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறி உள்ளார்.

தேர்தல் ஆணைய விதிப்படி, காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு  6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், இன்னும் ஓராண்டில் தமிழக சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால், இடைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.