சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக நடமாடும் டீ கடையை (எலக்ட்ரிக் ரெட்ரோஃபிட் ஆட்டோ ரிக்‌ஷா) கில்லி சாய், மாட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டியுடன் இணைந்து அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த தனித்துவமான டீ கடை முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

இது தவிர, டிரஸ்ட் புரம், பெசன்ட் நகர் மற்றும் பெரம்பூரில் ஒரே நாளில் மற்ற மூன்று மோட்டார் கில்லி சாய் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த தொடக்கவிழா நிகழ்வில் *நடிகர் நாசர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*, வருமான வரி கூடுதல் ஆணையர் *நந்தகுமார் ஐஆர்எஸ்,* விஜிபி தலைவர் *விஜிபி சந்தோசம்*, ஸ்பெயின் கவுன்சில் ஜெனரல் *டோனி லோபோ*, இயக்குநர் *எஸ்.எம்.வசந்த்*, பர்வீன் டிராவல்ஸ் இயக்குநர் *சாதிக்* மற்றும் எம் ஆட்டோ தலைவர் *மன்சூர் அலிகான்* உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

[youtube-feed feed=1]