நாசிக்: நாட்டின் மிகப்பெரிய மொத்த சந்தையான லாசல்கானில் வெங்காய ஏலத்தை விவசாயிகள் நிறுத்திவிட்டனர்.
நாசிக் மாவட்டத்தின் நிபாத் தாலுகாவில் அமைந்துள்ள சந்தை லாசல்கான் சந்தையாகும். இதுதான் நாட்டின் மிகப்பெரிய மொத்த சந்தையான இங்கு, வெங்காய விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டது.
இது விவசாயிகளை கோபப்படுத்தியது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட, வெங்காயம் ஏலம் நிறுத்தப்பட்டது. ஏலம் நிறுத்தப்பட்டதை சந்தையின் செயலாளர் நரேந்திர வாதவனே, உறுதிப்படுத்தினார்.
ஏற்றுமதியின் போது, நிலவிய நிச்சயமற்ற தன்மையே விலைகளில் சரிவு ஏற்பட்டதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர். நகர்ப்புற சந்தைகளில் திடீரென விலை உயர்வு வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதை தடை செய்வதற்கும் இறக்குமதியை அனுமதிப்பதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் காரணமாக அமைந்தது.
சந்தைகளைத் திறக்கும் முடிவு குறித்து மத்திய உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் ட்வீட் செய்திருந்தாலும், அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
ஏற்றுமதிக்கு அனுமதிக்காவிட்டால், அடுத்த நாட்களில் மொத்த விலை வீழ்ச்சியடையும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிப்ரவரியில் குவிண்டால் ஒன்றுக்கு சுமார் 1,950 ரூபாயாக இருந்த வர்த்தக விலை திங்களன்று ரூ .1,450 ஆக குறைந்தது, குறிப்பிடத்தக்கது.