சென்னை :
‘தமிழகத்தில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் வகையில் மார்ச் 9ந்தேதி முதல் ஏப்ரல் 9ந்தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வு குழுவில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் 14ந்தேதி துணைமுதல் வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, 4 நாட்கள் மட்டுமே விவாதங்கள் நடைபெற்ற நிலையில், சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் குறித்து ஆய்வு நடத்த தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று (2-03-2020) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதில்எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டமன்ற சபாநாயகர் அறிவித்தார்.
அதன்படி, வரும் 9ந்தேதி முதல் ஏப்ரல் 9ந்தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், 26 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடெபறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.