கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த 6000 பெயர்கள், செல்போன் எண் அடங்கிய பட்டியலை திமுகவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதியும், அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் போட்டியிடுகின்றனர். அமைச்சரும், அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களின் செல்போன் எண்களை வாங்கி, கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்து வருவதாக புகார்கள் எழுந்து வந்தன.

இந் நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய 6000 பெயர்கள், செல்போன் எண் அடங்கிய பட்டியலை திமுகவினர் பறிமுதல் செய்து, தேர்தல் பறக்கும் படையினரிடமும், போலீசாரிடமும் அளித்து உள்ளனர்.

அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகிளில் எல்லாம் இத்ததைய சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டறிந்து முன் கூட்டியே தடுக்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.