சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய கடைசி நாளான 4ந்தேதி கூடுதல் 2மணி நேரம் அனுமதி வழங்கப்படுவதாகவும், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்புவது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாத்தியபிரதா சாகு தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த  தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் 6ந்தேதிக்கு முன்னதாக ஏப்ரல் 4ந்தேதி மாலையும் தேர்தல் பரப்பு முடிவுக்கு வருகிறது. பொதுவாக மாலை 5 மணி வரை மட்டுமே தேர்தல் பரப்புரைக்கு அவகாசம் வழங்கப்படும் நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கடைசி பரப்புரை நாளான ஏப்ரல் 4ம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் அனுமதி வழங்கப்படுகிறது. அதன் காரணமாக அரசியல் கட்சியினர் மாலை 7 மணி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும்,  வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்புவது குறித்து இன்று முடிவு செய்யப்படும்  என கூறினார்.