டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,21,48,487 ஆக உயர்ந்து 1,62,502 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,125 பேர் அதிகரித்து மொத்தம் 1,21,48,487 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 355 அதிகரித்து மொத்தம் 1,62,502 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 41,217 பேர் குணமாகி  இதுவரை 1,14,32,052 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 5,49,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 27,918 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,73,436 ஆகி உள்ளது  நேற்று 139 பேர் உயிர் இழந்து மொத்தம் 54,422 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 23,820 பேர் குணமடைந்து மொத்தம் 23,77,127 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,40,542 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,389 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,21,279 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,607 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,946 பேர் குணமடைந்து மொத்தம் 10,92,365 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 24,646 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,975 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,92,779 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,541 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,262 பேர் குணமடைந்து மொத்தம் 9,54,678 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,541 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 993 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,00,805 ஆகி உள்ளது.  நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,213 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 480 பேர் குணமடைந்து மொத்தம் 8,86,978 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,614 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,342 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,84,094 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,700 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,463 பேர் குணமடைந்து மொத்தம் 8,56,548 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 14,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.