ஸ்ரீநகர்: காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்ருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
காஷ்மீர் மாநில, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்களவை உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து டிவிட் பதிட்டுள்ள அவர், எனது தந்தைக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், எனது தந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நானும் எனது குடும்பத்தாரும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தி உள்ளார்.
ஸ்ரீநகரைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான ஃபாரூக் அப்துல்லா, இந்த மாத தொடக்கத்தில் மார்ச் 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.