இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 329 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இங்கிலாந்தின் அதிரடியை கட்டுப்படுத்த, பந்துவீச்சை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விராத் கோலி.

இல்லையெனில், ஒருநாள் தொடரை இந்திய அணி இழக்க நேரிடும். இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 336 ரன்கள் எடுத்தபோதும், விராத் கோலி, இந்தியப் பந்துவீச்சை மோசமாக கையாண்டதால், அந்தப் போட்டியில் தோற்றது இந்திய அணி.

சபதம் எடுத்ததுபோல் வெறும் 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தினார். வாய்ப்பு இருந்தும், ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓவர்கள் தரவில்லை. ஆனால், இங்கிலாந்து குறைந்தது 6 பெளலர்களைப் பயன்படுத்துகிறது.

அதுவும், இன்றையப் போட்டியில் அந்த அணி 7 பெளலர்களைப் பயன்படுத்தியது. அந்த அனைவருமே விக்கெட் எடுத்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே, இன்று இந்திய அணி ஆறாவது பெளலராக ஹர்திக் பாண்ட்யாவை பயன்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்றையப் போட்டியிலும், பந்துவீச்சு துறையை விராத் கோலி மோசமாக பயன்படுத்தினால், அவர் கடும் விமர்சனங்களை சந்திக்க நேரும். ஏனெனில், எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கையில், வேண்டுமென்றே ஏதேனும் ஏடாகூடம் செய்வது அவரின் வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.