புனே: இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், இன்னும் 4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி, 350 ரன்களை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிரடியாக ஆடிவந்த ஷர்துல் தாகுர் 21 பந்துகளில் 30 ரன்கள் அடித்திருந்த நிலையில், மார்க்வுட் பந்தில் அவுட்டானார். அவர் 3 சிக்ஸர்கள் & 1 பவுண்டரி அடித்திருந்தார்.
கருணால் பாண்ட்யாவுக்கு தேவையான பார்ட்னர்ஷிப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென அவுட்டானார். அதேசமயம், அவர் சற்று பொறுமையாக ஆடியிருந்தால் விக்கெட்டை தக்கவைத்திருக்கலாம்.
தற்போது கருணால் பாண்ட்யா, 20 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் புவனேஷ்வர் இணைந்துள்ளார். இந்திய அணி, தற்போது 320 ரன்களை 46 ஓவர்களில் எடுத்துள்ளது.
இந்திய அணி, இன்னும் கூடுதலாக 30 ரன்களை அடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.