புனே: இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணிக்கு பெரிய பார்ட்னர்ஷிப், இதுவரை அமையவில்லை. தன் அண்ணனுடன் நிலைத்துநின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 64 ரன்களில் அவுட்டானார்.
தற்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், கடைசி நம்பிக்கையாக, கருணால் பாண்ட்யாவும், ஷர்துல் தாகுரும் ஆடிவருகின்றனர். இந்த ஜோடியும் இந்தியாவை கைவிடும் பட்சத்தில், நிலைமை மோசமாவது உறுதி.
இந்திய அணி, மிடில் ஓவர்களில் ஆடியபோது, குறிப்பாக, ஹர்திக் மற்றும் பன்ட் ஆடியபோது, 350 ரன்களை எளிதாக கடக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், பன்ட் & பாண்ட்யா ஆட்டமிழந்தவுடன் நிலைமை வேறாக ஆகிவிட்டது.
தற்போது இந்திய அணி 289 ரன்களில் உள்ளது. இன்னும் ஓவர்கள் நிறைய கைவசம் உள்ள நிலையில், பேட்ஸ்மென்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே, தற்போது களத்தில் உள்ளவர்கள், பொறுமையாக ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.