சென்னை
தமிழகத்தில் இன்றைய (27/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 2,089 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,77,279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,659 பேர் உயிர் இழந்து 8,52,463 பேர் குணம் அடைந்து தற்போது 12,157 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 775 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,45,483 பேர் பாதிக்கப்பட்டு 4,226 பேர் உயிர் இழந்து 2,36,472 பேர் குணம் அடைந்து தற்போது 4,785 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 58,077 பேர் பாதிக்கப்பட்டு 689 பேர் உயிர் இழந்து 56,296 பேர் குணம் அடைந்து தற்போது 1,092 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 55,369 பேர் பாதிக்கப்பட்டு 809 பேர் உயிர் இழந்து 53,306 பேர் குணம் அடைந்து தற்போது 1,254 பேர் சிகிச்சையில் உள்ளனர்.