சென்னை:  தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக வெற்றிபெறும் என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியான மாலைமுரசு தொலைக்காட்சியில், வெளியிடப்பட்ட தகவலை அரசு கேபிள் நிறுவனம் இருட்டடிப்பு செய்த கொடுமை அரங்கேறியுள்ளது. இது ஊடகத்துறையினரிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அரசு கேபிள் மூலம் தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. நகரப்பகுதிகளில், பலர், கேபிள்களை நாடாமல்,  டிஷ் மூலம் தொலைக்காட்சி நிகழ்வுகளை கண்டுகளித்து வருகின்றன. ஆனால், ஊராட்சி, கிராமப்புறங்களில், கேபிள் மூலம் தொலைக்காட்சி நிகழ்வுகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனமான மாலைமுரசு தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் சேனல் எண் 146ல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையியில் நேற்று இரவு (25ந்தேதி) தேர்தல் கருத்து கணிப்பு தொடர்பாக நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில், திமுகவே வெற்றிபெறும் என கணிப்புகள் ஒளிபரப்பகின.  அப்போது   அரசு கேபிள் டிவி நிறுவனத்தினர், அந்த தகவலை பொதுமக்கள் கேட்க முடியாதவாறும், பார்க்க முடியாதவாறும் இடையூறு செய்த அவலம் அரங்கேறியது.

இதைக்கண்ட பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்து, கேபிள்காரர்களிடம் தகராறு செய்துள்ளனர்.  அரசு கேபிள் நிறுவனத்தின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.