பாரூச்

குஜராத் மாநில பாஜக பிரமுகர் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் மனைவியுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பாரூச் மாவட்ட நகர பாஜக பிரமுகராக ஹிமான்சூ வைத் என்பவர் உள்ளார்.   இவர் அந்த பகுதியின் பொது அமைச்சர் அதாவது நம் ஊர் நாட்டாமைக்கு சமமாக பதவி வகித்து வந்தார்.  இவருடைய பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் இவர் நட்பு ரீதியாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.  இரு வீட்டினரும் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் அடிக்கடி சென்று வருவது வழக்கமாகும்.

இந்த வார தொடக்கத்தில் பக்கத்து வீட்டுக்காரர் மனைவி திடீரென காணாமல் போய் விட்டார்.  அவரை அவர் குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடி உள்ளனர்.  இது குறித்து விவரங்களை சொல்ல ஹிமான்சூ வீட்டுக்கு சென்றால் அவரும் காணாமல் போய் உள்ளார்.   இருவருடைய மொபைல் போனும் வீட்டிலேயே இருந்ததால் அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் எழுந்தது.

அதன் பிறகு ஹிமான்சூ தனது பக்கத்து வீட்ட்டுகாரர் மனைவியுடன் ஓடிப்போனது தெரிய வந்தது.  அதன் பிறகு இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவே இரு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   இது குறித்து அந்த பெண்ணின் கணவருக்கு எதுவும் தெரியவில்லை.  அந்த பெண்ணுக்கு இரு குழந்தைகள் உள்ளன.

இந்த தகவல் அறிந்த பாரூச் மாவட்ட பாஜக தலைவர் மாருதி சிங் கட்சியின் அடிப்படை உறுப்பினர்  இருந்து ஹிமான்சூவை 6 வருடங்களுக்கு இடை நீக்கம் செய்துள்ளார்.   இந்த 6 வருடங்களுக்கு அவரால் பாஜகவில் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது.