90-ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. நடிகர் செந்திலுடன் இணைந்து இவர் செய்த காமெடிகள் அனைத்தும் என்றும் பசுமையானவை.
உடல்நல பிரச்னைகளுக்குப் பிறகு, கவுண்டமணி நடிப்பில் இருந்து விலகியிருக்கிறார்.
இப்போது கவுண்டமணியின் ஒரு பழமையான புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் சத்யராஜின் குழந்தைகள் நடிகர் சிபிராஜ் மற்றும் திவ்யா சத்யராஜ் ஆகியோருடன் கவுண்டமணி அமர்ந்திருக்கிறார். இதனை திவ்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.