தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதை கொரோனா தொற்றின் இரண்டாவது அலை என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முறையைப் போலவே, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மும்பையில் வசித்து வரும் திரை நட்சத்திரங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நடிகர் அமீர்கான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார், இப்போது அவரது 3 இடியட்ஸ் படத்தில் உடன் நடித்த, நடிகர் மாதவன் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.
“ஃபர்ஹான் ராஞ்சோவைப் பின்தொடர வேண்டும், வைரஸ் எப்போதுமே எங்களுக்குப் பின்னால் இருக்கிறது, ஆனால் இந்த முறை பிடிபட்டுவிட்டது. ஆனால் ஆல் இஸ் வெல்” என்று குறிப்பிட்டுள்ள மாதவன் அனைவரின் அன்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
Farhan HAS to follow Rancho and Virus has always been after us BUT this time he bloody caught up. 😡😡😄😄BUT-ALL IS WELL and the Covid🦠 will be in the Well soon. Though this is one place we don’t want Raju in😆😆. Thank you for all the love ❤️❤️I am recuperating well.🙏🙏🙏 pic.twitter.com/xRWAeiPxP4
— Ranganathan Madhavan (@ActorMadhavan) March 25, 2021