நடிகை சஞ்சனா ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாக்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
பூரி ஜெகந்நாத் – பிரபாஸ் நடித்த ‘புஜ்ஜிக்காடு’ படம் சஞ்சனாவுக்கு பெரும் புகழை பெற்று தந்தது.
அதன் பிறகு சத்யமே ஜெயதே, எஸ்- 2, சர்தார் கப்பார் சிங் ஆகிய படங்களில் நடித்தவர், பின்னர் கன்னட சினிமா பக்கம் ஒதுங்கினார்.
அங்கு சில மோசமான நண்பர்கள் கிடைத்தார்கள்.
விளைவு?
போதைப்பொருள் வழக்கில் சஞ்சனாவை சில மாதங்களுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
3 மாதங்கள் சிறையில் இருந்த சஞ்சனா அண்மையில் ஜாமீனில் விடுதலை ஆனார்.
விடுதலை ஆனதும், கர்நாடகத்தை சேர்ந்த டாக்டர் பாட்ஷா என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
கல்யாண போட்டோக்களை, தனது வலைத்தளத்தில் சஞ்சனா வெளியிட்ட பிறகே, சினிமா காரர்களுக்கே அவரது கல்யாணம் தெரிய வந்துள்ளது.
– பா. பாரதி