45 ஆண்டுகளுக்கு முன்னர் ‘திருனோட்டம்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் – மோகன்லால். இன்னும் மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.
அவர் ‘பாரோஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
இதன் ஷுட்டிங், கொச்சியில் உள்ள நவோதயா ஸ்டூடியோவில் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
மலையாள சினிமா உலகமே திரண்டு வந்து மோகன்லாலை வாழ்த்தியது.
மம்முட்டி, திலீப், ப்ரிதிவி ராஜ், பாசில், பிரியதர்ஷன், சிபிமலயில், சந்தோஷ் சிவன், மேஜர் ரவி உள்ளிட்டோர் வாழ்த்தியோரில் அடங்குவர்.
மோகன்லால் நடித்து தேசிய விருது பெற்ற மரக்கார்- படத்தை தயாரித்த அந்தோணி பெரும்பாவூர், இந்த படத்தை தயாரிக்கிறார்.
படத்தின் கதை என்ன?
விஞ்ஞான சாதனங்கள் கண்டு பிடிப்பதற்கு முன்னர், உலகம் சுற்றி வந்த ஆராய்ச்சியாளர் வாஸ்கோட காமா.
அவரது பாதுகாவலர் பெயர்-பாரோஸ்.
அவரது வாழ்க்கை வரலாற்று படம் தான் இது.
பாரோஸ் வேடத்தில் நடிக்கிறார், மோகன்லால்.
– பா. பாரதி