ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை இயக்கவுள்ளார் சங்கர். இதற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தப் படம், சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகி, மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ‘முதல்வன்’ படத்தை இந்தியில் ‘நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார் சங்கர். அதற்குப் பிறகு சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்திப் படமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் படத்தில் நாயகியாக பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.