ஒளிப்பதிவாளர்களாக இருந்து சினிமா டைரக்டர்களாக ஜொலித்த பலரில் பாலு மகேந்திரா, கே.வி.ஆனந்த் ஆகியோர் அடங்குவர்.
அயன், உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக செய்தி பரவியது.
ஆனால் இதனை ஆனந்த் மறுத்துள்ளார்.
“சிவகார்த்திகேயனை வைத்து படம் டைரக்டு செய்ய எனக்கு ஆசை. ஆனால் எனது அடுத்த படத்தில் அவர் ஹீரோ அல்ல. சரியான ஸ்கிரிப்ட் கிடைத்தால் சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவேன்” என்று தெரிவித்தார்.
“அடுத்து, மாஃபியா கும்பல் குறித்த படத்தை டைரக்டு செய்யப்போகிறேன். மாஃபியா எல்லா இடத்திலும் உள்ளது.
மாஃபியா கும்பல் குறித்து மும்பையை களமாக கொண்டு நாயகன் படம் தயாரானது. நான் தமிழக மாஃபியா கும்பல் குறித்த படத்தை இயக்க உள்ளேன்” என கே.வி.ஆனந்த் கூறுகிறார்.
இந்த படத்தில் காதலும் இருக்குமாம்.
– பா. பாரதி