சென்னை

விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

 

திரைப்பட நடிகரான தீப்பெட்டி கணேசன் இன்று மரணம் அடைந்த செய்தியால் ரசிகர்கள் மிகவும் சோகம் அடைந்துள்ளனர்.  இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இடியாக பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகரும் திரைப்பட நடிகருமான வெங்கடேஷ் இன்று மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்த தகவல் வந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெங்கடேஷ்.   அதன் பிறகு அவர் பாரதி கண்ணம்மா தொடரில் கதாநாயகிக்கு தந்தையாக நடித்துள்ளார்.  இதை தவிர சன் தொலைக்காட்சியின் செல்லமடி நீ எனக்கு தொடரிலும் நடித்துள்ளார்.    இவர் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்  பெற்றவர் ஆவார்.

இன்று மதியம் 2.30 மணிக்கு வெங்கடேஷ்க்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்துள்ளார்.  வெங்கடேஷ் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   அவரது மறைவுக்கு  பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் வெங்கடேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]