டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,16,45,719 ஆக உயர்ந்து 1,60,003 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,009 பேர் அதிகரித்து மொத்தம் 1,16,45,719 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 213 அதிகரித்து மொத்தம் 1,60,003 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 21,205 பேர் குணமாகி  இதுவரை 1,11,49,324 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 3,31,671 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 30,535 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,79,682 ஆகி உள்ளது  நேற்று 99 பேர் உயிர் இழந்து மொத்தம் 53,399 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,314 பேர் குணமடைந்து மொத்தம் 22,14,867 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,10,120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 1,875 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,04,229 ஆகி உள்ளது.  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,496 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,251 பேர் குணமடைந்து மொத்தம் 10,74,805 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 24,619 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,715 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,70,202 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,434 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,048 பேர் குணமடைந்து மொத்தம் 9,44,256 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,434 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 368 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,93,734 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,189 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 263 பேர் குணமடைந்து மொத்தம் 8,84,357 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,188 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,289 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,66,982 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,599 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 668 பேர் குணமடைந்து மொத்தம் 8,46,480 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,903 பேர் சிகிச்சையில் உள்ளனர்.