இந்தி சினிமா உலகில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார், நம்ம ஊர் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
அவர் நடித்த ரோகி என்ற இந்திப்படம் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
அவர் “குட் லக் ஜெர்ரி” என்ற இந்திப்படத்தில் நடித்து வந்தார்.
தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் –இது. பஞ்சாபில் இதன் ஷுட்டிங் நடந்து வந்தது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி படப்பிடிப்பு தளத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் பெயரளவுக்கு ஜான்வி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
எனினும் போலீஸ் பாதுகாப்புடன் தான் ஷுட்டிங் நடந்தது. ஒரு வழியாக இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
கடைசி நாளன்று படக்குழுவுடன் இணைந்து வண்ண வண்ண பலூன்களை பறக்க விட்டு, இதனை கொண்டாடினார், ஜான்வி.
இந்த புகைப்படங்களை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஜான்வி கபூர் “இந்த படத்தின் படப்பிடிப்பு, இத்தனை சீக்கிரத்தில் முடியும் என்று நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
– பா. பாரதி