தெலுங்கு நடிகர் மகேஷ் ;பாபு, இப்போது “சர்காரிவாரு பாடா” என்ற படத்தில் நடித்து வருகிறார். பரசுராம் இயக்கும் இந்த படத்தில் மகேஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இதனை முடித்து விட்டு எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்டு செய்யும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார், மகேஷ் பாபு.
ராஜமவுலி, தனது படத்தை ஆரம்பிக்க கொஞ்சகாலம் ஆகும் என்பதால், அதற்கு முன்னதாக இன்னொரு படத்தில் நடிக்க திட்டம்.
அண்மையில் புதிய இயக்குநர் ஒருவர் மகேஷ்பாபுவை சந்தித்து கதை சொன்னார்.
மகேஷுக்கு பிடித்து போயிற்று, முழு ஸ்கிரிப்டை கொண்டுவருமாறு தெரிவித்துள்ளார்.
“இரண்டு மாதத்தில் இதன் ஷுட்டிங்கை முடித்து விட வேண்டும்” என அந்த புதிய இயக்குநருக்கு கட்டளை போட்டுள்ளார்.
மகேஷ் பாபு அண்மையில் புதிய கேரவன் வாங்கியுள்ளார்.
குளியல் அறை ஹால், டிவி, சமையல் அறை என சகல வசதிகளும் கொண்ட இந்த கேரவன் விலை 8 கோடி ரூபாய்.
– பா. பாரதி