மும்பை

பிரேசில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவின் உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில், பிரிட்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது.    இந்த தொற்று பல நாடுகளிலும் காணப்படுகிறது.   இந்த பாதிப்பு இந்தியாவிலும் காணப்படுகிறது.

இந்தியாவில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி வரை உருமாறிய கொரோனா பாதிப்பு 242 ஆக இருந்தது.  இரண்டே வாரத்தில் மேலும் 158 பேருக்கு அது பரவி உள்ளது.  இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.    இந்த விவரம் இன்று வெளியாகி உள்ளது/

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது பிரேசில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்ரிக்காவின்  உருமாறிய கொரோனா வைரஸ் 400 பேருக்குப் பரவி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.