கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி நடிகை சித்ரா சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
சித்ரா தற்கொலை செய்துகொண்ட அந்த ஹோட்டல் அறை எண் 113 இதுவரை பூட்டியே இருந்தது. இந்நிலையில் அந்த அறையில் சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் பொருட்களை எடுத்துச் செல்ல சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த அறைக்குள் சென்ற சித்ராவின் தாயார், சித்ரா தற்கொலை செய்துகொண்ட அந்த சீலிங் Fan-ஐ பிடித்து இழுத்து கதறி அழுதுள்ளார். Fanக்கும் Bedக்கும் இருக்கும் உயரத்தை கணக்கிட்டு இப்படி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்று கதறி அழுதுள்ளார் சித்ராவின் பெற்றோர்.
ஹோட்டல் ஜன்னலில் ஒரு ஆள் வெளியே செல்லும் அளவுக்கு பெரிதாக உள்ளது இது கொலை தான் என கத்தி கதறியுள்ளனர்.
ஹோட்டல் அறையில் இருந்த மது பாட்டிலை பார்த்த சித்ராவின் தந்தை இது எப்படி வந்தது என்று கதியுள்ளார்.
பின்னர் சித்ராவின் அம்மா சித்ராவின் உடைகள், பேன்சி பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டார். முதலில் சித்ராவின் பெற்றோருக்கும், பின்னர் ஹேம்நாத்தின் பெற்றோருக்கும் அந்த அறையில் இருந்த உடமைகளை எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது.