புவனேஸ்வர்

பூரி ஜகன்னாதர் கோவிலுக்குச் சொந்தமான 35000 ஏக்கர் நிலத்தை ஒரிசா அரசு விற்பனை செய்கிறது.

இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒரிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜகன்னாதர் ஆலயமும் ஒன்றாகும்.   இந்த கோவிலுக்கு ஒரிசாவின் 24 மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.  இவை அனைத்தும் பூரி ஜகன்னாதர் பெயரில் பதியப்பட்டுள்ளன.  இந்த நிலம் குறித்து ஒரிசா சட்டப்பேரவையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு ஒரிசா அரசின் சட்ட அமைச்சர் பிரதாப் ஜனா, “பூரி ஜகன்னதர் பெயரில் மாநிலத்தின் 24 மாவட்டங்களில் 60,426 ஏக்கர் நிலம் உள்ளன. அதைத் தவிர மேற்கு வங்கம்,. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் பீகாரில் சுமார் 395 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளன.

இதில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான 34,876.983 ஏக்கர்கள் இது வரை மீட்கப்பட்டுள்ளன.  அவற்றை அரசின் ஒப்புதல் பெற்றுள்ள சமநோக்கு கொள்கையின் கீழ் விற்பனை செய்ய நடவடிக்கைகள்: எடுக்கப்பட்டுள்ளன.   அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த நிலங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளனர்.

இதற்கான ஒப்புதலை முன்னாள் ஆளுநர் பி பி சர்மா மற்றும் ஜகன்னாதர் கோவில் நிர்வாகக் குழு அளித்துள்ளன.   இதில் ஏற்கான்வே 315.337 ஏக்கர் நிலம் விற்கப்பட்டு  அதற்கான தொகை ரூ.11.20 கோடி ரூபாய் கோவில் நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் கோவில் நிலத்தை 30 வருடங்களுக்கு மேல் ஆக்கிரமித்துள்ளவர்களிடம் இருந்து ஏக்கருக்கு ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு நிலத்தை அவர்களுக்கே அளிக்கப்பட உள்ளது.  இதைப் போல் 20 ஆண்டுகள் வரை ஆக்கிரமித்தோர் ஏக்கருக்கு ரூ.9 லட்சமும் 12 ஆண்டுகள் வரை ஆக்கிரமித்தோர் ஏக்கருக்கு ரூ.15 லட்சமும் செலுத்தினால் அவர்களுக்கு நிலம் அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.