கொல்கத்தா: உங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்?  என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரெக் ஓ பிரையன் பாஜகவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் பாஜகவுக்கும் ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும்  மோதல் நீடித்து வருகிறது. அங்கு வரும் 27ந்தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரசாரமும் அனல்பறந்து வருகிறது.

இநத் நிலையில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், முன்னாள் பாஜக மத்திய அமைச்சரான யஷ்வந்த்சின்ஹா உள்பட சிலர் சேர்ந்தனர். இது பாஜகவுக்கு பின்னடையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்,  புதியதாக பாஜக தலைவர்களை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததது குறித்து  வங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய திரிணாலமுல் எம்.பி. டெரெக் ஓ பிரையன், உங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று உங்களால் காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.

மேலும்,  நான் பிரதமரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன். உங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எங்களிடம் மம்தா பானர்ஜி இருக்கிறார். நீங்கள் ஏன் ஒரு பெயரை கூறமுடியவில்லை? ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் நீங்கள் A என பெயரிட்டால், B மற்றும் C கிளர்ச்சி செய்யும். நான் உனக்கு சவால் விடுகிறேன். உங்கள் முதலமைச்சர் யார் என்று அறிவியுங்கள் பார்க்கலாம்.

எங்கள் முதல்வர் மக்களுக்கு வாக்களிக்கிறார் – உறுதியளிக்கிறார். ஆனால், உங்களால் உறுதி கூறமுடியவில்லை, வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்றுவதில்லை   என்று விமர்சித்தார்.