கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சபரிமலை விவகாரம், அந்த மாநிலத்தில் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.

கேரளாவில் உள்ள இடதுசாரிகள் அரசாங்கம், இந்த தீர்ப்பை ஏற்று அனைத்து பெண்களையும் சபரிமலைக்கு செல்ல அனுமதித்தது. இந்துக்கள் மத்தியில் இது பெரும் கோபத்தை உருவாக்கியது. அரசை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினர்.

தேர்தலில் இந்துக்களின் ஓட்டுகள் சிதறி விடுமோ என்ற கவலையில் “சபரிமலையில் நாங்கள் பெண்களை அனுமதித்தது தவறு தான்” என அண்மையில் தேவசம் அமைச்சர் சுரேந்திரன் கருத்து கூறினார்.

இது குறித்து கேரளாவுக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரியிடம் கருத்து கேட்கப்பட்டது.

“அமைச்சர் சுரேந்திரன் சொன்ன கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்தியது சரிதான்” என எச்சூரி சொல்லி விட்டு, டெல்லி போய்விட்டார்.

இந்துக்கள் மத்தியில் எச்சூரி கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்த, “ஓட்டுகள் திசை மாறி சென்று விடுமோ?” என ,இடதுசாரிகள் தூக்கம் தொலைந்து உள்ளனர்.

– பா. பாரதி