புதுச்சேரி:  தமிழகத்தைப்போல புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜக, அதிமுக, பாமக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து புதுச்சேரி பா.ம.க. விலகுவதாக அறிவித்து, தன்னிச்சையாக  வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

30 தொகுதிகளைக்கொண்ட புதுச்சேரி மாநிலத்தில், முன்னாள் முதல்வர் என்.ஆர்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக இடம்பெற்றிருந்தது.   இதில்,  என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பாரதிய ஜனதா 9 இடங்களிலும், அ.தி.மு.க. 5 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதனால் பாமகவுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் எழுந்தது.   பா.மக.வுக்கு 3 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என அக்கட்சி மாநில அமைப்பாளர் தன்ராஜ் வற்புறுத்தி வந்தார்.

ஆனால், எந்தவொரு கூட்டணி கட்சியும், தொகுதிகளை ஒதுக்க மறுத்துவந்ததால், கூட்டணியில் இருந்து விலகிய பாமக தன்னிச்சையாக களமிறங்கி உள்ளது. முதல்கட்டகமாக 9 தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

மண்ணாடிப்பட்டு – வெங்கடேசன், அரியாங்குப்பம் – சிவராமன், மங்கலம் – மதியழகன், தட்டாஞ்சாவடி -கதிர்வேல், லாஸ்பேட்டை நரசிம்மன், மணவெளி – கணபதி, இந்திரா நகர் வடிவேல், ஊசுடு (தனி)- கலியபெருமாள், திருபுவனை (தனி) – சாண்டில்யன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.