சென்னை: வாக்காளர்களே உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மற்றும் விவரம் தெரிய வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம் அதற்கான பிரத்யேக இணையதளம் அறிவித்துள்ளது. அந்த இணையத்தளத்திற்கு, சென்று, வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள தகவல்களை கண்டறியலாம்.
இதற்காக தேர்தல் ஆணையம் affidavit.eci.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி, வேட்புமனுக்களை பதிவேற்றி வருகிறது.
இந்த இணையதளத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று, உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார், அவர் எந்த கட்சி என்பதை தெரிந்து கொள்வதுடன், அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள அஃபிடவிட் எனப்படும் சொத்து குறித்த விவரங்களையும் டவுன் செய்து கண்டறியலாம்.
போர் அடிச்சா…இந்த வெப்சைட்டை பாருங்க வாக்காளர்களே…
உங்களுக்கு புடிச்ச வேட்பாளரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாக்களித்து, உங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்க….
இணையதளத்தில்இருந்து டவுன்லோடு செய்யப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலினின் அஃபிடவிட்…
(கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் முழு விவரம் அறியலாம்)