ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இதுவரை படக்குழுவினர் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது “வலிமை அப்டேட்” என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.

இதைத் தாண்டி பிரதமர் மோடி பயணித்த இடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்டோரிடமும் “வலிமை அப்டேட்” என்று கேட்டு வந்தார்கள்.

தற்போது அனைத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வலிமை படத்தில் வரும் முக்கிய பைக் ஸ்டண்ட் காட்சியை ஸ்பெயினில் படமாக்க திட்டமிட்டுள்ளார் வினோத். இந்நிலையில் படக்குழு அடுத்த மாதம் ஸ்பெயினுக்கு கிளம்புகிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறு. ஸ்பெயினில் இருக்கும் நிபுணர்கள் உதவியுடன் தான் அந்த காட்சியை படமாக்க முடியுமாம். ஸ்பெயினில் 10 நாட்கள் தான் படப்பிடிப்பாம். அதை மட்டும் முடித்துவிட்டால் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும்.