நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.

இந்நிலையில் பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆஷிஷ் வித்யார்த்தி தமிழில் பாபா, ஏழுமலை, பகவதி, தமிழன், ஈ, ஆறு உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானார்.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை ஆஷிஷ் வித்யார்த்தி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இது நான் விரும்பாத ஒன்று. நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தற்போது கொரோனா அறிகுறிகள் இல்லை. விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CMT9iLRjLMb/

[youtube-feed feed=1]