சென்னை: வரும் 17ம் தேதி மதிமுக தேர்தலை அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட உள்ளார்.
இதுகுறித்து மதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 17.3.2021 புதன்கிழமை காலை 11 மணிக்கு தலைமை நிலையம் தாயகத்தில், மறுமலர்ச்சி தி.மு.க. தேர்தல் அறிக்கையினை பொதுச் செயலாளர் வைகோ வெளியிடுகிறார்.
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்குக் கேட்டு தேர்தல் பிரச்சாரப் பயணத்தை 18.3.2021 அன்று பொதுச்செயலாளர் வைகோ தொடங்குகிறார்.
அன்று மாலை 5 மணிக்கு கொளத்தூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், தி.மு.கழக தலைவருமான மு.க.ஸ்டாலினை ஆதரித்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.