சென்ன‍ை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

மேலும், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில், மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன் விபரம்:

பொன்னேரி (தனி) – துரை சந்திரசேகர்

ஸ்ரீபெரும்பதூர் (தனி) – கே.செல்வப் பெருந்தகை

சோளிங்கர் – ஏ.எம்.முனிரத்னம்

ஊத்தங்கரை(தனி) – ஜே.எஸ்.ஆறுமுகம்

கள்ளக்குறிச்சி(தனி) – கே.ஐ.மணிரத்னம்

ஓமலூர் – ஆர்.மோகன் குமாரமங்கலம்

ஈரோடு கிழக்கு – திருமகன் இவெரா

உதகமண்டலம் – ஆர்.கணேஷ்

கோயம்புத்தூர் தெற்கு – மயூரா. ஜெயக்குமார்

உடுமலைப்பேட்டை – கே.தென்னரசு

விருதாச்சலம் – எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்

அறந்தாங்கி – எஸ்.டி.ராமச்சந்திரன்

காரைக்குடி – எஸ்.மாங்குடி

மேலூர் – டி.ரவிச்சந்திரன்

ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) – பி.எஸ்.டபிள்யூ.மாதவ்ராவ்

சிவகாசி – ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன்

திருவாடனை – ஆர்.எம்.கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி.எஸ்.அமிர்தராஜ்

தென்காசி – பழனி நாடார்

நாங்குநேரி – ரூபி ஆர்.மனோகரன்

கிள்ளியூர் – எஸ்.ராஜேஷ்குமார்

 

இதுதவிர, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில், பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளராக, மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.