
துபாய்: ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசையில், இந்தியாவின் ரிஷப் பன்ட் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன்னர் 14வது இடத்திலிருந்த ரிஷப் பன்ட், 747 புள்ளிகளைப் பெற்று தற்போது 7வது இடத்திற்கு வந்துள்ளார். இவருடன் இதே 7வது இடத்தில் ரோகித் ஷர்மா மற்றும் நியூசிலாந்தின் ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோரும் உள்ளனர்.
வாஷிங்டன் சுந்தர் 62வது இடத்தைப் பிடித்துள்ளார். கேப்டன் விராத் கோலி 814 புள்ளிகளுடன் 5வது இடத்திலேயே நீடிக்கிறார். இந்த வரிசையில், நியூசிலாந்தின் வில்லிம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் பெளலர்கள் தரவரிசையில், அஸ்வின் 850 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் பெளலர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில், விண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் முதலிடத்திலும், ஜடேஜா 3வது இடத்திலும் உள்ளனர்.
[youtube-feed feed=1]