புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும் போட்டியிடத் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது.  இங்குக் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வைத்துள்ளன.  இன்று அந்தக் கட்சிகளுக்கிடையே ஆன தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது.

அதன்படி மொத்தமுள்ள 30 தொகுதி8களில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளிலும் திமுக 13 தொகுதிகளிலும் போட்டி இடுகின்றன.   மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதியும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் போட்டியிட்டது.  தற்போது 15 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.  2016 ஆம் ஆண்டு தேர்தலை விட தற்போது 5 இடங்கள் குறைவாகக் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.

[youtube-feed feed=1]