சென்னை: எஸ்டிபிஐ கட்சிக்கு திமுக, அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்கத நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேசி வந்தது. நேற்றும் தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசித்து வந்தது. இந்த நிலையில், இன்று திடீரென அமமுகவை சந்தித்து, கூட்டணி அமைத்து, தொகுதி உடன்பாட்டிலும் கையெழுத்திட்டுள்ளது. இதில், எஸ்டிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், திமுக, அதிமுக கூட்டணி தவிர மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு கூட்டணியும், அமமுக தலைமையில் மேலும் ஒரு கூட்டணியும் அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி உள்ளார்.
இதற்கிடையில், கூட்டணியில் இடம்கிடைக்காத சில கட்சிகள் மற்ற கூட்டணியை நாடி வருகின்றன. அதுபோல, எஸ்டிபிஐ கட்சியும் தேர்தலில் போட்டியிட கூட்டணியை தேடி வந்தது. நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியது. அப்போது, எஸ்டிபிஐ கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க தயாராக இருப்பதாக கமல் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று திடீரென டிடிவி தினகரனை சந்தித்து பேசியது. அப்போது, இரு தரப்புக்கும் உடன்பாடு எட்டியதாக கூறப்படுகிறது. அதன்படி அமமுகவுடன் தொகுதிப் பங்கீடு செய்துவிட்டதாகவும் எஸ்டிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
ஆலந்தூர்,
அம்பத்தூர்,
திருச்சி மேற்கு,
திருவாரூர்,
மதுரை மத்திய தொகுதி,
பாளையங்கோட்டை ஆகிய ஒரு தொகுதிகள் எஸ்டிபிஐ கட்சிக்கு அமமுக ஒதுக்கியுள்ளது.