காளிதாசர் எழுதிய ‘சாகுந்தலம்’ கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார், டைரக்டர் குணசேகர்.

சாகுந்தலம் என்ற பெயரிலேயே இந்த வரலாற்றுப்படம் சினிமாவாகிறது.

சகுந்தலையாக சம்ந்தா நடிக்க- துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

அவர் இப்போது ‘புள்ளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்து விட்டு சாகுந்தலம் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்காக, வாள் சண்டை மற்றும் குதிரை ஏற்றம் கற்று வருகிறார், தேவ் மோகன்.

சாகுந்தலம் படத்தின் ஷுட்டிங் இந்த மாத கடைசியில் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படத்தை வெளியிட தீர்மானித்துள்ளனர்.

“கதை விவாதத்தின் போது சமந்தாவை சந்தித்தேன். நல்ல சந்திப்பு” என கூறுகிறார், தேவ் மோகன்.

– பா. பாரதி