ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகிய படங்களை இயக்கிய டி.எம்.ஜெயமுருகன், கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து புதிய படம் டைரக்டு செய்து வருகிறார்.
இந்த படத்துக்கு ‘தீ இவன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கார்த்திக் ஜோடியாக சுகன்யா நடித்துள்ளார்.
கார்த்திக்- சுகன்யா ஆகியோர் ஏற்கனவே சின்ன ஜமீன், சீமான் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
படம் குறித்து டைரக்டர் ஜெயமுருகன் தெரிவித்த தகவல் :
“சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை சொல்லும் படம் இது.
கமலஹாசனை விட்டால், இந்த கேரக்டரில் கார்த்திக் தான் நடிக்க முடியும் என தீர்மானித்தேன். கார்த்திக்கை சந்தித்து கதை சொன்னேன். உடனடியாக கால்ஷீட் கொடுத்தார்.
படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தில் கார்த்திக் – நான்கு சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்” என்கிறார், டைரக்டர் ஜெயமுருகன்.
கார்த்திக் – சுகன்யா தவிர, இந்த படத்தில், ‘சேது’ அபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, இளவரசு, சிங்கம் புலி, ஆகியோரும் நடித்துள்ளனர்.
– பா. பாரதி