துபாய்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 3-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் பங்கேற்கும் அணிகளில், அதிக புள்ளிகள் பெற்ற அணியாக மாறியுள்ளது இந்தியா.
இந்திய அணி மொத்தம் 6 தொடர்களில் விளையாடி, 520 புள்ளிகளுடன், 72.2% வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணியுடன் மோதவுள்ள நியூசிலாந்து அணி, மொத்தம் 5 தொடர்களில் விளையாடி, 420 புள்ளிகளுடன், 70.0% வெற்றியை வைத்துள்ளது.
மூன்றாமிடத்தில், 4 தொடர்களில் விளையாடி, 332 புள்ளிகளுடன், 69.2% வெற்றியை வைத்துள்ளது ஆஸ்திரேலியா.
அதற்கடுத்த இடங்களில், இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ளன.
இந்தப் பட்டியலில், இந்தியாவும் இங்கிலாந்தும்தான், அதிகபட்சமாக 6 டெஸ்ட் தொடர்களில் ஆடியுள்ளன. ஆஸ்திரேலியா 4 தொடர்களில் மட்டுமே ஆடியுள்ளது.