கமலஹாசன் நடிக்க ரமேஷ் அரவிந்த் இயக்கிய படம் ‘உத்தம வில்லன்’. சூர்யா நடிக்க லிங்குசாமி இயக்கிய படம் ‘அஞ்சான்’.
இந்த இரு படங்களையும் தயாரித்தவர் லிங்குசாமி. இரண்டு படங்களிலும் பெருத்த நஷ்டம்.
லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடிக்க அவரே தயாரித்த ‘சண்டைக்கோழி-2’ எதிர்பார்த்த அளவு போகவில்லை.
மூன்று ஆண்டுகளாக முடங்கி கிடந்த லிங்குசாமி, மீண்டும் உற்சாகத்துடன் கிளம்பி விட்டார்.
தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழி்களில் அவர், புதிய படம் டைரக்டு செய்கிறார்.
தெலுங்கு நடிகர் ராம் பொதிநேனி கதாநாயகனாக நடிக்கிறார். அண்மையில் இந்த படத்தின் பூஜை எளிமையாக நடந்துள்ளது. மே மாதம் விசாகப்பட்டனம், ஐதராபாத் ஆகிய இடங்களில் ஷுட்டிங் நடக்கிறது.
இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார். தெலுங்கில் பல படங்களை கைவசம் வைத்துள்ள கீர்த்தி ஷெட்டிக்கு, இது தான் முதல் தமிழ் படம்.
இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நதியா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
– பா. பாரதி